பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)
see also in :
http://tamil-share-market. blogspot.in/2010/05/basics-of- stock-market.html
பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)
பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.
சரி! வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்
|
தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
- தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
- சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
மேலே கூறப்பட்ட Partnership
என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன்
முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக
உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)
· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.
இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
In English
|
தமிழில்
|
Accumulated Loss
|
மொத்த நட்டம்
|
AMC
|
ஏ.எம்.சி
|
Applications
|
விண்ணப்பங்கள்
|
Assets
|
சொத்து
|
Association of Mutual Funds in India(AMFI)
|
ஏ.எம்.எப்.ஐ
|
BEAR
|
கரடி
|
Bombay Stock Exchange (BSE)
|
மும்பை பங்குச்சந்தை
|
Bond
|
பத்திரங்கள்
|
Brokerage/Commission
|
கட்டணம்
|
BULL
|
காளை
|
Buy/Buying/Purchasing
|
வாங்குவது
|
Capital
|
மொத்த முதலீடு
|
Capital Appreciation
|
முதலீட்டின் பெருக்கம்
|
Credit Card
|
கடண் அட்டை
|
Cycle
|
சுழற்சி
|
Debentures
|
கடண் பத்திரங்கள்
|
Debt
|
கடண்
|
Delist
|
டீ-லிஸ்ட் - பட்டியலிருந்து நீக்குவது.
|
Demat Account
|
டிமேட் கணக்கு
|
Depreciation
|
தேய்மானம்
|
Discount
|
தள்ளுபடி
|
Dividend
|
டிவிடண்ட்
|
Earnings Per Share (EPS)
|
ஒரு பங்குக்கு பெற்ற வருமானம்
|
Entry Load
|
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்
|
Exit Load
|
பரஸ்பர நிதிகளில் அலகுகளை விற்க்கும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்.
|
Face Value
|
முகப்பு விலை
|
Fixed Deposits
|
நிரந்தர வைப்பு நிதி
|
Folio
|
போலியோ எண்
|
Foreign Institutional Investors (FII)
|
வெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு
|
Fund Manager
|
நிதி நிர்வாகி
|
Gain/Profit
|
லாபம்
|
Growth
|
வளர்ச்சி
|
வருமான வரி
| |
பணவீக்கம்
| |
Initial Public Offering (IPO)
|
ஐ.பி.ஓ
|
முதலீடுகள்
| |
Investor
|
முதலீட்டாளர்
|
Kissan Vikas Patra (KVP)
|
கிஸான் விகாஸ் பத்திரங்கள்
|
Liquidity
|
தேவையான போது பணம் எடுத்துக்கொள்வது
|
List
|
லிஸ்ட் – பட்டியலிடுவது
|
Load
|
கட்டணம்
|
Loss
|
நட்டம்
|
Market Value
|
சந்தை விலை
|
Maturity Period
|
முதிர்ச்சி காலம்
|
Mutual Funds
|
பரஸ்பர நிதிகள்
|
National Savings Certificate (NSC)
|
தேசிய சேமிப்பு பத்திரங்கள்
|
National Stock Exchange (NSE)
|
தேசிய பங்குச்சந்தை
|
Net Asset Value (NAV)
|
என்.ஏ.வி
|
NIFTY
|
நிப்ஃடி - தேசிய பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது.
|
NYSE
|
நியூயார்க் பங்குச்சந்தை
|
Online Trading
|
இணைய வர்த்தகம்
|
Permanent Account Number (PAN)
|
பாண் அட்டை
|
Portfolio
|
போர்ட்போலியோ
|
Post Office Saving
|
அஞ்சலக சேமிப்பு கணக்கு
|
PPF (Public Provident Fund)
|
பி.பி.எப் - வருமானத்திலிருந்து பிடித்ததில் முதலீடு செய்வது.
|
Premium
|
பிரீமியம்
|
Primary Market
|
முதன்மைச்சந்தை
|
Proprietorship
|
தனியார் வியாபாரம்
|
Saving
|
சேமிப்பு
|
Securities and Exchange Board of India (SEBI)
|
செ.பி
|
Secondary Market
|
வெளிச்சந்தை
|
Sell / Selling
|
விற்பது
|
SENSEX
|
சென்செக்ஸ் அலகு - மும்பை பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது
|
Share holder/Stock holder
|
பங்குதாரர்
|
Share Market/Stock Market
|
பங்குச்சந்தை
|
Speculation
|
நிலையற்ற தன்மை
|
Stock
|
பங்கு
|
Stock Broker
|
பங்குதரகர்
|
Systematic Investment Plan (SIP)
|
தவணை முறை
|
Tax
|
வரி
|
Tax Gain scheme
|
வருமான வரி சேமிப்பு பிளான்கள்
|
Trader
|
வர்த்தகர்
|
Trading
|
வர்த்தகம்
|
Units
|
அலகுகள்
|
Volatile
|
ஏற்ற இறக்கமாக இருப்பது
|
டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield) Book Value என்றால் என்ன? EPS என்றால் என்ன ? (Earning per share)
Fundamental Analysis
அனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவது. ஒரு நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டு கணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள் தான் பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்தின் திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்த பண்டமன்டல் அனாலிசசு உதவும். இந்த Fundamental Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டு பங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் பெறலாம் அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்த பண்டமன்டல் அனாலிசசு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்…
EPS என்றால் என்ன ? (Earning per share)
ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது.
உதாரணமாக:
HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்து வாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம்.தற்போது அப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும். இந்த EPS முறையை Fundamental Analysis-க்குப் பயன்படுத்துவார்கள்.
PE Ratio என்றால் என்ன?
ஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவுத்தொகையே PE Ratio எனப்படும். உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை ரூ.200 அதன் EPS ரூ.25 என்று வைத்துக்கொண்டால்
PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும்.
பொதுவாக ஓரு பங்கின் PE Ratio குறைவாக இருந்தால் அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பி வாங்கலாம். நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளை கண்டறிய Fundamental Analysis-ல் இதுவும் ஒரு முறையே. இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்த பங்கு என்று கூற முடியாது.
Book Value என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும் அந்நிறுவனதின் மொத்த சொத்துக்கள் இவற்றின் மொத்த மதிப்பே Book Value எனப்படும்.
பேலன்சு சீட் (Balance Sheet)
ஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன் மொத்த பங்குகளின் மதிப்பு (Equity Shares) மற்றும் அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்பு இவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சு சீட் எனப்படும். இது அந்நிறுவனத்தின் தற்போதைய செயல்பாட்டை தெளிவாக விளக்கும்.
நெட் வொர்த் (Net Worth)
ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்த செலவுகள்,கடன்கள் ஆகியவகைகள் போக வருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான் அந்நிறுவனத்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட் வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இருக்க வேண்டும்.
SWOT அனாலிசசு
ஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threats போன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOT அனாலிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், மற்றும் எதிர் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்று கணக்கிட உதவுகிறது.
டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)
இதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒரு சிறிய கணக்கின் மூலம் விளக்கினால் உங்களுக்கு எளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட் கொடுத்துள்ளது என்றால்
பேஸ் வேல்யு (Face Value) = 1000
டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000
ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000
2000 க்கு லாபம் = 5000
1000 க்கு லாபம் = 2500
Projected Earning Growth (PEG)
பங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட, எதிர் காலத்தில் ஒரு நிறுவனம் மற்றும் அதன் பங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறைய லாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இது போன்ற பல வழிகளில் ஒன்றுதான் PEG
TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG ?
PE Ratio = 30 என்றால்
PEG = 30 / 15
பொதுவாக PEG மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அதிகளவு ரிட்டன் (Returns) கிடைக்கும்.
பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
வருமான வரி என்றால் என்ன? (What is meant by Income Tax)
இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.
வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது.
வருமான வரி எங்கு செலுத்த வேண்டும்? (Where should I pay Income Tax ?)
வருமான வரி-யை வருமான வரி துறையிடம் செலுத்த வேண்டும். இதை இன்கம் டாக்ஸ் பைலிங் (Income Tax filing) என்பார்கள். ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம் இறுதியில் செலுத்த வேண்டும்.
வருமான வரி செலுத்த என்னென்ன தேவை ?
Class of Assessees | Category | Form |
Individuals, HUF, Firms etc. (except companies and charitable assessees) | All cases | Form No. 2D or Saral form |
One by Six scheme | Form No. 2C | |
Business or Profession income | Form No. 2 | |
Non- business income | Form No.3 | |
Non business income and total income less than Rs 2 lakhs | Form No. 2A | |
Charitable assesses | All cases | Form No 3A |
Company except charitable assesses | All cases | Form No 1 |
Search cases | All cases | Form No 2B |
வருமான வரி எந்த காலக்கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ? (What is the period for which a person’s income is taken into account for purpose of Income tax?)
ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் 1 தேதி முதல் மார்ச் 31 வரை பெற்ற வருமானத்தை கொண்டு வரி கணக்கிடப்படுகிறது. இக்காலக்கட்டத்தை வருமான வரி ஆண்டு (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதனை பிரிவியஸ் இயர் (Previous year) என்றும் அழைக்கப்படுகிறது.
அசஸ்மெண்ட் இயர் என்றால் என்ன? (What is an Assesment Year ?)
ஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டு மாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31) அசஸ்மெண்ட் இயர் (Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயரில் நாம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07 the AY is 2007-08.)
வருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள் ? (What does the Income Tax Department consider as income?)
இது ஐந்து வகைப்படும்,
- சம்பளத்தின் மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary)
- வீட்டின் மூலமாக பெறப்படும் வருமானம். (வாடகைக்கு விடுவது, விற்பது, லீஸ்க்கு விடுவது …..) (Income from House property)
- வியாபாரத்தின் மூலமாக பெறப்படும் வருமானம். (Income from Business or Profession)
- முதலீட்டின் மூலமாக லாபமாக பெறப்படும் வருமானம். (Income from capital gains)
- மற்ற வழிகளில் பெறப்படும் வருமானம். (Income from other sources)
வருமான வரி சேமிப்பு வழிகள் ?
- Tax Rebates under Indian Income Tax Act
Specified Investment Schemes u/s 80C - Life insurance premium payments
- Contributions to Employees Provident Fund/GPF
- Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
- National Saving Certificates. [NSC]
- Unit Linked Insurance Plan (ULIP)
- Repayment of Housing Loan (Principal)
- Equity Linked Savings Scheme (ELSS)
Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction). - Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
- Interest accrued in respect of NSC VIII issue.
பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.
பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
- வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.
- டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.